இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் புதன்கிழமையை கூடுதலாக பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.
மருத்துவம், துறைமுகங்கள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து, பிற அனைத்துத் துறைகளும் வாரத்தின் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக இருக்கும் என்றும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




