இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் – ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஜோடிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்லை காதல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு கபீர், ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. தற்போது மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெண் குழந்தை பிறந்த செய்தியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தினேஷ் கார்த்திக், குழந்தைக்கு ராஹா பல்லிகல் கார்த்திக் எனப் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்து ள்ளார். தினேஷ் கார்த்திக்கின் பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




