Vimarsagan Media

Home » Malaysia » சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தல் மலேசியர் உட்பட இருவர் கைது

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தல் மலேசியர் உட்பட இருவர் கைது

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்கள் கடத்த முயன்ற மலேசியர் உட்பட இருவரை, சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கைது செய்துள்ளது.

மார்ச் 17 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில், மலேசியாவில் பதிவுசெய்யப் பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற 29 வயது மலேசியர் ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதே முதல் வழக்கு என்று ICA கூறியது.

“மேம்படுத்தப்பட்ட சோதனைகளில், மோட்டார் சைக்கிளின் பின்புறப் பெட்டியில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாக நம்பப்படும் பல கருப்புப் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மேலதிக சோதனைகளை நடத்தினர்.

“கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாக நம்பப்படும் மொத்தம் 25 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.” “அந்தப் பொட்டலங்களில் சுமார் 14 கிலோ ஹெராயின், 2.6 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் 190 கிராம் எக்ஸ்டஸி ஆகியவை இருந்தன,” என்று ஒரு ஃபேஸ்புக் பதிவில்கூறப்பட்டுள்ளது.

மறுநாள், அவர் பயணித்த மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனம் மேம்படுத்தப் பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப் படுமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 29 வயதான சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகள், அவரது இடுப்புப் பகுதியில், பிறப்புறுப்புப் பகுதிக்கு அருகே போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படும் ஒரு பொட்டலத்தைக் கண்டெடுத்தனர். மேலதிக சோதனைகளில், அவரிடமிருந்து பல்வேறு போதைப்பொருள் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 81 கிராம் கஞ்சா அடங்கிய ஒரு பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது,” என்று ஐ.சி.ஏ. கூறியது

Scroll to Top