Vimarsagan Media

Home » World » அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கை இந்தியா மற்றும் சீன மக்கள் பாதிப்பு

அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கை இந்தியா மற்றும் சீன மக்கள் பாதிப்பு

டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 2வது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றத்தில் இருந்து குடியேறிகள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால் இந்திய மற்றும் சீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் அமெரிக்க விசாக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் விசா வழங்கப்படுவது பெருமளவு குறைந்துள்ளது.2024 இல் முதல் எட்டு மாதங்களில் வழக்கப்பட்டதை விட 2025 இல் முதல் எட்டு மாதங்களில் சுமார் 2.5 லட்சம் விசாக்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இது ஒரே ஆண்டில் 11% சரிவு ஆகும்.

இதில் அதிகபட்சமாக இந்தியா மற்றும் சீனாவை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் மட்டும் 84,000 குறைந்துள்ளன. 2024 இல் 3.44 லட்சமாக இருந்த F1 மாணவர் விசாக்கள், 2025இல் 2.38 லட்சமாகக் குறைந்துள்ளன.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களின் உறவினர்களுக்கு குடும்ப விசாக்கள் வழங்கப்படுவது 27% குறைந்துள்ளது B1 மற்றும் B2 ஆகிய சுற்றுலா விசா சுமார் 2 லட்சம் விசாக்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இணையருக்கு வழங்கப்படும் Spouse Visa, 37,229 லிருந்து 18,894 ஆக பாதியாக குறைந்துள்ளது.

இந்திய ஐடி பணியாளர்களுக்கு மிக முக்கியமாக கருதப்படும் H-1B வேலைவிசாக்களுக்கு இப்போது மிகக் கடுமையான பாதுகாப்புப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன

Scroll to Top