Vimarsagan Media

Home » Entertainment » பாப் நட்சத்திரம் டுவா லிபா மற்றும் பேன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” நடிகர் காலெம் டர்னர் திருமணம்

பாப் நட்சத்திரம் டுவா லிபா மற்றும் பேன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” நடிகர் காலெம் டர்னர் திருமணம்

பாப் நட்சத்திரம் டுவா லிபா மற்றும் “ஃபேன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்” நடிகர் காலெம் டர்னர் இணையர் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் திருமணம் செய்துகொண்ட தாக ஊடக அறிக்கைகள் தெரிவிக் கின்றன. இந்த எளிமையான திருமணத்தைத் தொடர்ந்து சிசிலியில் மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற லாம் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

ஒரு சில குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மட்டும் நடைபெற்ற ஒரு சிவில் விழாவிற்குப் பிறகு, ஓல்ட் மேரிலேபோன் நகர மண்டபத்திலிருந்து தம்பதியினர் வெளியேறும் புகைப்படங்களை ‘தி சன்’ மற்றும் ‘டெய்லி மெயில்’ ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

30 வயதான டுவா லிபா, திருமணத்திற்காக ஷியாபரெல்லி ஸ்டுடியோ வடிவமைத்த வெள்ளை நிற தொப்பி மற்றும் ஆடையை அணிந்திருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 36 வயதான டர்னர், அடர் நீல நிற சூட் அணிந்திருந்தார்.

ஜனவரி 2024 முதல் ஒன்றாக இருந்து வரும் இந்தத் தம்பதியினரின் பிரதிநிதிகள், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஏஎஃப்பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

2016-ல் வெளியான தனது “Be The One” தனிப்பாடலுக்குப் பிறகு பிரிட்டனின் முன்னணிப் பாடகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள,கொசோவோவிலிருந்து குடியேறியவர்களின் மகளான டுவா லிபா, கடந்த ஆண்டு பிரிட்டிஷ் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தானும் டர்னரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

Scroll to Top