Gojek நிறுவனத்தின் துணை நிறுவனரும் இந்தோனேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான நடீம் மகாரிம்முக்கு (Nadiem Makarim) 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 55,850 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.அவர் கூடுதலாகச் சுமார் 45 மில்லியன் டாலர் இழப்பீடு செலுத்தவேண்டும் அல்லது இன்னும் ஒரு தவணை சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
கோவிட் 19 நோய்த்தொற்றின்போது பள்ளிகளுக்கு Chromebook கணினிகளைப் பெறுவதன் தொடர்பிலான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் அரசாங்கத்திற்கு சுமார் 120 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.41 வயது மகாரிம் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
தாம் நிரபராதி என்றும் தம் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் சொன்னார்.




