Vimarsagan Media

Home » World » ஒடிசாவில் 5ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் பாலிவுட் பாடல் பிரசுரம் இணையத்தில் வைரல்

ஒடிசாவில் 5ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் பாலிவுட் பாடல் பிரசுரம் இணையத்தில் வைரல்

ஒடிசாவில் 5ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் பாலிவுட் பாடல் அச்சிடப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் சல்மான் கான் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுக் சனம்’ படத்தில் இடம் பெற்ற ‘நிம்பூடா நிம்பூடா’ பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ஐஸ்வர்யா ராய் நடனமாடியிருப்பார்.

இந்த சம்பவம் குறித்து இணையத்தில் பலரும் பள்ளி கல்வித்துறையைக் கடுமையாக கேள்வி கேட்டு வருகின்றனர். பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் எப்படி இவ்வளவு பெரிய பிழை வந்தது எனக் கேட்கின்றனர்.

மேலும் பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பதிப்பு அல்லது அச்சுப் பிழை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து மும்பை வடக்கு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான வர்ஷா ஏக்நாத் கெய்க்வாட் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்வுக்குப் படிக்காத மாணவர் ஒருவர் விடைத்தாளில் ‘ஷோலே’ திரைப்படத்தின் கதையை எழுதியது குறித்த பிரபலமான நகைச்சுவை இது நினைவுக்கு வருகிறது.

இதைத்தான் பாடத்திட்டத்தை வடிவமைப் பவர்கள் இதில் செய்துள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறை இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top