சென்னையில் நடிகை ஷ்ருதி ஹாசன் புதிய வீடு வாங்கி கிரஹபிரவேசம் செய்துள்ளார்.தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமானது.
தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப் படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதி க்கு போதிய வரவேற்பு கிடைக்க வில்லை.
தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந் நிலையில், ஷ்ருதி சென்னையில் புது வீடு வாங்கி கிர்ஹபிரவேசம் செய்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஷ்ருதிக்குச் சொந்தமாக மும்பையிலும் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது




