உள்துறை அமைச்சரும், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா சண்முகம் மூத்த அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
அவர் மூன்று பொறுப்புகளையும் வகிப்பார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார்.சிலர் முழு அமைச்சர்களாகப் பொறுப்பேற் கின்றனர்.
மேலும் சில துணையமைச்சர்கள் மூத்த துணை அமைச்சர்களாக நியமனம் பெறுகின்றனர்.பிரதமர் அலுவலகத்தி லும் புதிய முகம் கொண்டுவரப் பட்டு உள்ளது.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) பிரதமர் அலுவலக அமைச்சராகிறார்.




