Vimarsagan Media

Home » World » அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் மூன்று பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் மூன்று பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த நபர் ஒருவரால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப் படுகிறது.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து அறிந்த காவல்துறை, விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற நபர் குறித்தும், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Scroll to Top