Vimarsagan Media

Home » World » இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டாலர் வெகுமதி: என அறிவித்தது அமெரிக்கா:

இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டாலர் வெகுமதி: என அறிவித்தது அமெரிக்கா:

அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு, தேடப்படும் டாப் 10 குற்றவாளிகளில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த கோல்டி பிரார் (எ) சத்தீந்திர்ஜீத் சிங் என்பவரை அறிவித்துள்ளது. தகவல் தெரிவித்தால் ஒரு மில்லியன் டாலர் அதாவது ரூ. 9.6 கோடி சன்மானம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ, தனது மிகவும் தேடப்படும் டாப் 10 குற்றவாளிகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரவுடி சத்தீந்திர்ஜீத் சிங் என்ற கோல்டி பிராரை சேர்த்துள்ளது.

கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையிலும் இவருக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இவர் இந்தியாவில் செயல்படும் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் குற்றக் கும்பலின் வட அமெரிக்கத் தலைவராகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. கோல்டி பிரார் (எ) சத்தீந்திர்ஜீத் சிங் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 9.6 கோடி சன்மானம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் இவர் ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாம் என்பதால், இவர் மிகவும் ஆபத்தானவர் என எப்.பி.ஐ எச்சரித்துள்ளது.

Scroll to Top