Vimarsagan Media

Home » World » ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக வயதான 2 ஆண்கள்- 114 மற்றும் 113 வயதை எட்டி உலக சாதனை!

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக வயதான 2 ஆண்கள்- 114 மற்றும் 113 வயதை எட்டி உலக சாதனை!

முதல் உலகப் போருக்கு முன் பிறந்த கடைசி 3 ஆண்களில் ஒருவர் – நீண்ட ஆயுளின் ரகசியத்தை பகிர்ந்த ஜோவ்.

உலகின் மிக வயதான மனிதரான பிரேசிலின் ஜோவ் மரினோ நெட்டோ தனது 114-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார். இதே நாளில், உலகின் இரண்டாவது மிக வயதான மனிதரான ஆஸ்திரேலியாவின் கென் வீக்ஸ் தனது 113-வது பிறந்த நாளை எட்டியுள்ளார்.

உலகளாவிய நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக, உலகின் பல மைல்களு க்கு அப்பால் வாழும் இவ்விரு முதியவர்களும் கைகளால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகளைப் பிடித்து, புகைப் படம் எடுத்துக்கொண்டு தங்களுக்குள் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

உலக சாதனைகளும் முக்கிய விபரங்களும் மனித வரலாற்றிலேயே 114 வயதை எட்டிய ஒன்பதாவது மனிதர் என்ற பெருமையை ஜோவ்பெற்றுள்ளார். மேலும், பிரேசில் நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஆண் இவராவார்.

ஆண்களை விடப் பெண்களே அதிக காலம் வாழ்வது பொதுவானது (உலகின் மிக வயதான பெண் எத்தேல் கேதர்ஹாம் அண்மையில் 117 வயதை எட்டினார்). இந்த பாலின ஆயுட்கால இடைவெளி யைக் கடந்து, ஒரு ஆண் 114 வயதை எட்டுவது 117 வயதை ஒரு பெண் எட்டுவதை விட மிகவும் அரிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என்று ‘லாங்விஜெஸ்ட்’ அமைப்பின் நிபுணர் பென் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

Scroll to Top