தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் 26.2 2026 உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க, தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவின் கழுத்தில் மாங்கல்யம் கட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. கர்நாடக மாநிலம் கூர்க் நகரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா அவர்களது ‘கொடவா’ முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாராம். அதனால், அவரது விருப்பமாக முறைப்படியும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.




