Vimarsagan Media

Home » India » பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம் :- கவிஞர் வைரமுத்து

பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம் :- கவிஞர் வைரமுத்து

தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வைரமுத்துவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து இதற்கு முன்பு பத்மபூஷன், பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலை மாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற ஏழு விருதுகளையும், ஏழு தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். வைரமுத்துக்கு விருது: 2002 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கு இலக்கியத்திற்கு ஆற்றியஅரிய பணியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 24 ஆண்டுகள் கழித்து தற்போது கவிஞர் வைரமுத்து இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டதும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் வைரமுத்துவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஞானபீட விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். திரையுலகை சேர்ந்த பலரும் அவருதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top