Vimarsagan Media

Home » India » இந்தியா ஏஜ துறையில் அபரித வளர்ச்சி

இந்தியா ஏஜ துறையில் அபரித வளர்ச்சி

இனி IT சர்வீஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது ,இந்தியாவுக்கே சிக்கல் என்கிற நிலைப்பாட்டை மாற்றிய சாம் ஆல்ட்மேன்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதே சாம் ஆல்ட்மேன் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு AI துறையில் இந்தியாவால் சாதிக்க முடியாது என்பது போலக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் உள்ள சிறிய டீம்களால் ஏஐ மாடல்களை உருவாக்க உண்மையில் முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், அதுபோன்ற முயற்சிகள் பயனற்றது.. முற்றிலும் சாத்தியமற்றது என்று கூறியிருந்தார்.

அவர் கடந்த 2023ல் இந்த பதிலை அளித்திருந்தார். ஆனால், இப்போது சில ஆண்டுகளில் அவர் தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா AI துறையில் எந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது. இந்தியாவுக்கு ஆல்ட்மேன் கருத்து மேலும் நம்பிக்கையைக் கொடுப்ப தாகவே இருக்கிறது.

நாடு முழுக்க AI வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏஐ வகுப்பறைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றன. சாட்ஜிபிடி நிறுவனத்திற்கும் இந்தியா முக்கியமான சந்தையாக மாறியுள்ளது. வெறுமனெ பரிசோதனை சந்தை என்பதில் இருந்து முக்கிய சந்தையாக மாறியுள்ளது. இப்போது அமெரிக்காவுக்கு இந்தியாவில் தான் சாட் ஜிபிடிக்கு அதிக பனணர்கள் இருக்கிறார்கள். இதனால் வரும் காலத்தில் மேலும் மேலும் சாட் ஜிபிடி தனது இந்தியச் சந்தையை விரிவுபடுத்த முயலும் என்பதில் சந்தேகமே இல்லை.

Scroll to Top