Vimarsagan Media

Home » Entertainment » புரபுதேவா மகன் ரிஷிதேவா அறிமுகம்

புரபுதேவா மகன் ரிஷிதேவா அறிமுகம்

இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக பன்முகம் கொண்டவர் என பிரபலமானவர் பிரபுதேவா. இப்போதும் தீவிரமாக ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக அவரது வீட்டிலிருந்தே ஒரு ஹீரோவை களம் இறங்கியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல. நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவை கலைப் பயணத்தில் காலடி எடுத்து வைக்க அடிக்கல் நட்டு வைத்திருக்கிறார். ‘முதல் முதலாய் ‘ என்ற ‘இண்டி மியூசிக்கல்’ வீடியோ ஆல்பம் மூலம் நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். ரிஷி தேவா

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். ரிஷி தேவா உடன் இணைந்து நடிகை கைரா இப்பாடலில் நடனமாடியுள்ளார்.

Scroll to Top