Vimarsagan Media

Home » World » அரசியலுக்காக இதுபோன்ற நாடகங்கள் நடத்துவது மிகவும் சாதாரணம்:-டிரம்ப்

அரசியலுக்காக இதுபோன்ற நாடகங்கள் நடத்துவது மிகவும் சாதாரணம்:-டிரம்ப்

அமெரிக்காவில் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ என்ற அரசின் கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அதிபர் டொனால்டு டிரம்ப், தன் அலுவலகத்தில் தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ் பர்கர்களை’ ஆர்டர் செய்து வாங்கினார். அரசியலுக்காக இதுபோன்ற சில நாடகங்கள் நடத்துவது சாாதரணம் என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் 2024 தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த டிப்ஸ்களுக்கு வரி இல்லை என்ற கொள்கை, கடந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாட கடந்த 13ம் தேதி, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ் பர்கர் மற்றும் ப்ரைஸ்’ உள்ளிட்டவற்றை ‘டோர் டேஷ்’ என்ற ஆன்லைன் தளம் மூலம் வரவழைத்தார்.

இதை, ஆர்கன்சாஸைச் சேர்ந்த டோர் டேஷ் நிறுவனத்தின் ஓட்டுநரும் குடியரசு கட்சியின் ஆதரவாளருமான ஷரோன் சிம்மன்ஸ் என்பவர் ஓவல் அலுவகலத்திற்கு நேரில் சென்று, அதிபர் டிரம்பிடம் வழங்கினார். இது தொடர்பான படங்கள், வீடியோக்களை, டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசுகையில், “இந்த விளம்பர செயல்கள் சற்று தரம் குறைந்ததாக சிலருக்கு தோன்றலாம். ஆனால், அரசியலுக்காக இதுபோன்ற நாடகங்கள் நடத்துவது மிகவும் சாதாரணம்,” என்றார்.

No comments yet

Be the first to comment.

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Scroll to Top