Vimarsagan Media

Home » Malaysia » உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை;

உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை;

எஸ்பிஎம் (spm) மற்றும் எஸ்டிபிஎம் சிஜில் (stpm) சான்றிதழ்களைப் பெற்றவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை; மாறாக, அவர்களின் ஆர்வங்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில், அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர சாத்தியமான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படு கின்றன.

இந்த ஆண்டு சுமார் 100,000 எஸ்பி எம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 75,000 எஸ்டிபி எம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) போன்ற திறன் சார்ந்த துறைகளிலும் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.

“நாங்கள் பரந்த அளவிலான அணுகலை வழங்குவதால், (பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு) எங்களிடம் ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லை. தேவையான தகுதிகள் உள்ளவர்கள் தங்கள் படிப்பைத் தொடர ஆர்வமாக இருக்கும் வரை, அதற்கேற்ப அவர்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Scroll to Top