Vimarsagan Media

Home » World » ஜெமினி நேனோ பனானாவில் சொந்த புகைப்படம் ஏஐ மூலம் வடிவமைக்கலாம்

ஜெமினி நேனோ பனானாவில் சொந்த புகைப்படம் ஏஐ மூலம் வடிவமைக்கலாம்

கூகுள் போட்டோஸ் கணக்கில் உள்ள புகைப்படங்களை நேரடியாகப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தது போல ஏஐ படங்களாக மாற்றலாம். புகைப்படங்களைத் தேடி, டவுன்லோட் செய்து, அப்லோட் செய்து ஏஐ படங்களை உருவாக்க நேரமெடுப்பது பலருக்கு பெரிய வேலையாக தெரியும்.

அதையும் எளிதாக கூகுள் தனது ஜெமினி ஏஐ சாட்பாட்டில் படங்களை உருவாகும் நானோ பனானா சேவையில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது, இனி பயனர்கள் கூகுள் போட்டோஸ் கணக்கில் உள்ள புகைப்படங்களை நேரடியாகப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தது போல ஏஐ படங்களாக மாற்றலாம்.

இந்த வசதி பர்சனல் இன்டலிஜென்ஸ் எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகிறது.

உங்கள் கூகுள் போட்டோ லைப்ரேரியை ஜெமினி முழுமையாக ஆராய்ந்து வைத்துக்கொள்ளும். அதில் நீங்கள் படங்களுக்கு அளித்துள்ள லேபிள்களை யும் அறிந்து வைத்திருக்கும்.

உதாரணமாக, கூகுள் நேனோ பனானா அம்சத்தை தேர்வு செய்து, நானும் எனது நண்பனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது போன்று படத்தை உருவாக்கு என கட்டளையிட்டால் போதும் உங்கள் படத்தையும், உங்கள் நண்பர் படத்தையும் கூகுள் போட்டோஸ் லைப்ரேரியில் இருந்து அதுவாக எடுத்து கச்சிதமாக நீங்கள் கேட்டதை உருவாக்கித் தரும். பயனர்

Scroll to Top