Vimarsagan Media

Home » Malaysia » எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தலைமைத் தாங்கி வெளியீடு செய்ததில் தாம் மகிழ்ச்சி அடைந்ததாக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார். இந்நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை மதியம் 2.30 க்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் டத்தோஸ்ரீ எம் சரவணனின் தலைமையில் நடைபெற்றது.

எண்பதுகளில் தொடங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் யாவும், யதார்த்தமான வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் பதிவு செய்கின்றன. இத்தொகுப்பின் சிறப்பம்சம் அதன் அணுகுமுறை என்றால் மிகையாகாது. ஒவ்வொரு கதையின் முடிவும் ஒரு நிறைவு அல்ல, அது வாசகனைச் சிந்திக்கத் தூண்டும் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என தமதுரையில் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

வாசிக்கும் பழக்கம் நம்மிடையே அதிகமாக வேண்டும். எவ்வளவுதான் தொலைபேசியின் ஆதிக்கம் வந்தாலும், புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கும் அனுபவமும், ஆனந்தமும் வேறு வகை உற்சாகம் நிறைந்தவை..எனவே வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்து வோம் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தெரிவித்தார்.

Scroll to Top