Vimarsagan Media

Home » World » வாட்ஸ் அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!

வாட்ஸ் அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!

எலான் மஸ்க் தலைமையிலான X (முன்னர் ட்விட்டர்) நிறுவனம், உலகப் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்புக்கு நேரடி போட்டியாக XChat என்ற பிரத்தியேக மெசேஜிங் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. iOS சாதனங்களுக்காக (ஐபோன் மற்றும் ஐபேட்) இன்று கிடைக்கத் தொடங்கி யுள்ள இந்த ஆப், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.

XChat-ஐப் பயன்படுத்தி X பயனர்கள் ஒருவரோடு ஒருவர் தனிப்பட்ட முறையில் உரையாட முடியும். இது X தளத்தின் மெசேஜிங் அம்சத்தைத் தாண்டி, தனி ஆப்பாக வெளியிடப்பட்டு ள்ளது. முக்கிய சிறப்பம்சம் என்ன வென்றால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) தொழில்நுட்பம். இதனால் உரையாடல் கள் முழுமையாக பாதுகாக்கப் படுகின்றன.

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்புகளுடன் நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது. X-இன் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை இணைக்கும் சக்தி XChat-க்கு உண்டு. தனியுரிமை கவலை கொண்ட பயனர்களுக்கு இது பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.

XChat-ஐப் பதிவிறக்க App Store-ல் தேடலாம். எலான் மஸ்க் தொடர்ந்து X தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இது முக்கிய அடியாகப் பார்க்கப் படுகிறது. பாதுகாப்பு, வேகம், எளிமை ஆகியவற்றை ஒருங்கிணைத்த XChat, உலக மெசேஜிங் சந்தையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top