Vimarsagan Media

Home » World » இரவு விருந்து…. துப்பாக்கிச்சூடு செல்வாக்கை தக்க வைக்க டிரம்ப் அரங்கேற்றிய நாடகம் – ஈரான் கிண்டல்

இரவு விருந்து…. துப்பாக்கிச்சூடு செல்வாக்கை தக்க வைக்க டிரம்ப் அரங்கேற்றிய நாடகம் – ஈரான் கிண்டல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தினத்திற்கு முன் இரவு வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அவர் உயிர் தப்பினார்.

இந்நிலையில் விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என ஈரான் வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.

டிரம்ப் முடிவுகளால் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. லட்சக்கணக்கானோர் அவ்வப்போது வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டிரம்ப்புக்கு இருக்கும் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

ஈரான் மீதான போர் முடிவு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்த ஆவணங்கள், வரிகளால் விலைவாசி உயர்வு, குடியேற்றத்துக்கு எதிராக அடக்குமுறை ஆகியவை அவருக்கு எதிரான போக்குக்கு முக்கிய காரணமாக சுட்டப்படுகின்றன.

இந்த சூழலில் இதை மறைத்து நாட்டு மக்களை திசைதிருப்ப டிரம்ப் இந்த கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஈரானின் அந்த அனிமேஷன் வீடியோ சித்தரிக்கிறது.

Scroll to Top