Vimarsagan Media

Home » Malaysia » புதிய மலேசிய அனைத்துலக பாஸ்போர்ட் RM350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

புதிய மலேசிய அனைத்துலக பாஸ்போர்ட் RM350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

மலேசிய அனைத்துலகபாஸ்போர்ட் மலேசியர்கள் தற்போது ஐந்து வருட செல்லுபடியாகும் கடப்பிதழுக்கு RM200 செலுத்துகின்றனர், அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் RM100 செலுத்துகின் றனர்

நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழின்படி, புதிய மலேசிய கடப்பிதழ் RM350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கையொப்பமிட்ட அந்த அரசிதழில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு RM175 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் (PWD) அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மலேசியர்கள் தற்போது ஐந்து வருட செல்லுபடியாகும் கடவுச்சீட்டிற்கு RM200 கட்டணம் செலுத்துகின்றனர், அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் RM100 செலுத்துகின்றனர்.

சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடவுச்சீட்டுகளை மாற்றுவதற்கான கட்டணங்களையும் அரசிதழ் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதில், 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு முதல் முறை மாற்றுவதற்கான கட்டணம் முன்பு RM400 ஆக இருந்த நிலையில், தற்போது RM550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை மாற்றுவதற்கு RM850 மற்றும் அதைத் தொடர்ந்த மாற்றங்களுக்கு RM1,350 கட்டணம் வசூலிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு, முதல் முறை மாற்றுவதற்கு RM375, இரண்டாவது முறைக்கு RM675, மற்றும் அதைத் தொடர்ந்த மாற்றங்களுக்கு RM1,175 கட்டணம் வசூலிக்கப்படும்.

மாற்றுத்திறனாளி அட்டைதாரர்களுக்கு முதல் முறை மாற்றுவதற்கு RM200, இரண்டாவது முறை மாற்றுவதற்கு RM500, மற்றும் அதைத் தொடர்ந்த மாற்றங்களுக்கு RM1,000 கட்டணம் வசூலிக்கப்படும்

Scroll to Top