Vimarsagan Media

Home » General » ஹாலோ யார் பேசுறது…! மறுமுனை கப்சிப்….!

ஹாலோ யார் பேசுறது…! மறுமுனை கப்சிப்….!

கோலாலம்பூர், 15/12/2025 : திடீரென துண்டிக்கப்படும் அல்லது மறுமுனையில் சத்தமில்லாத (கப்சிப்) அழைப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை இன்று எச்சரித்துள்ளது.ஏனெனில் அவை குரல் சுரண்டல் மோசடிகளில் பயன்படுத்தப்படலாம் என புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (சிசிஐடி) இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான அழைப்புகளைப் பெறுவது, அவர்களின் குரல்களைப் பதிவு செய்வது மற்றும் அவர்களின் தொடர்புகளை ஏமாற்ற செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள் மூலம் அந்தப் பதிவுகள் பயன்படுத்தப்படுவது குறித்து இன்றுவரை எந்த புகார் அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் கூறினார்.

இருப்பினும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளின் போது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும், நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறினால் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் அழைப்பைச் சரிபார்க்கவும் தவறக் கூடாது.சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகள் உடனடியாக நிறுத்தப்பட்டு காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று மேலும் அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

Scroll to Top