கோலாலம்பூர், 15/12/2025 : ஆங்கில மொழியில் தேர்ச்சி என்பது உலக அளவில் தொடர்பு கொள்ள அரசு ஊழியர்களின் நம்பிக்கையையும் திறனையும் வலுப்படுத்துவதில் தேசிய மொழிக்கு ( மலாய் மொழி) ஒரு சிறப்பு திறனாகும் என்று வீடு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கா கோர் மிங் கூறினார். பஹாஸா மெலாயு தேசத்தின் பெருமையாகவும், நல்லிணக்கத்தின் மையமாகவும் உள்ளது, அதே நேரத்தில் ஆங்கில மொழி வாய்ப்புகளைத் திறக்கவும், இராஜதந்திரத்தை வலுப்படுத்துவும் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசு அதிகாரிகளைத் தயாரிக்கும் ஒரு முக்கியமான கருவியாகும் என்று அவர் கூறினார். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் தேர்ச்சி பெறுவது மலேசியாவின் சாதனைகளை அனைத்துலக அளவில் முன்னிலைப்படுத்தவும், உலகளாவிய ஒத்துழைப்பை ஈர்க்கவும் அனுமதிக்கிறது” என செய்தியாளர்களி டம் அவர் கூறினார்.




