Vimarsagan Media

Home » World » ஹாட்ரிக் வெற்றி! உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஹாட்ரிக் வெற்றி! உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஓஸ்லோ: நார்வே செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.நார்வே தலைநகர் ஓஸ்லோவில், சர்வதேச செஸ் (‘கிளாசிக்கல்’) 14வது சீசன் நடந்தது. ஆண்கள் பிரிவில் ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர்.

இதன் 9வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, குகேஷ் மோதினர். இத்தொடரின் 5வது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை வென்றிருந்தார். இம்முறை கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 34 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இத்தொடரில் தொடர்ந்து மூன்று போட்டியில் அசத்திய இவர், ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தார்.மற்றொரு போட்டியில் உலகின் ‘நம்பர்-1’ வீரர் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லேயிடம் தோல்வியடைந்தார்.

ஒன்பது சுற்றுகளின் முடிவில் சோ வெஸ்லே (15.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா (15.0), பிரான்சின் அலிரேசா (14.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். குகேஷ் (8 புள்ளி) 6வது இடத்தில் (கடைசி) உள்ளார்.

Scroll to Top