Vimarsagan Media

Home » World » எழுவர் கொண்ட குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி, ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் அனுமதி

எழுவர் கொண்ட குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி, ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் உள்ள ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில், குறைந்தது ஏழு சிறுமிகள் கொண்ட குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி, ஒன்பது நாட்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் செய்தித் தளமான மதர்ஷிப்பின்படி, இந்தச் சம்பவம் மே 3 அன்று இரவு சுமார் 10 மணியளவில், அந்த வணிக வளாகத்தின் 11-வது மாடியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது மகள், அந்த இடத்திற்கு ஆசை வார்த்தை கள் கூறி வரவழைக்கப்பட்டு, அந்தக் குழுவினரால் பதுங்கித் தாக்கப்பட்ட தாகவும், அவர்களில் நான்கு பேர் தனக்குத் தெரிந்தவர்கள் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் மற்றவர்களும் இருந்ததால், தனது மகள் அங்கிருந்து வெளியேறுவது கடினமாக இருந்த தாகவும், இந்தத் தாக்குதல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் அச் சிறுமி, தி சென்டர்பாயிண்ட் என்ற இடத்திற்குச் சென்று, அங்கிருந்து தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் உதவிக்காகத் தனது தாயை அழைத்தார்.

அன்று இரவு சுமார் 11.25 மணியளவில் உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அந்தச் சிறுமி சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை மதர்ஷிப்பிடம் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது.

பின்னர், கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறுமிகள் கைது செய்யப்பட்டதாக வும், இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட உடல் காயங்கள் மற்றும் மன உளைச்சல் ஆகிய இரண்டிலிருந்தும் தனது மகள் மீண்டு வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்தார்.

Scroll to Top