Vimarsagan Media

Home » Malaysia » மலேசியா சுற்றுலா 2026’ பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும்

மலேசியா சுற்றுலா 2026’ பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும்

சுற்றுப்பயணப் பிரசார இயக்கத்தின் வாயிலாக இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா போன்ற சிறப்பாகச் செயல்படும் நிலையான சந்தைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மலேசியாவின் சுற்றுப்பயண, கலை மற்றும் கலாசார அமைச்சு தனது உத்தியை வலுப்படுத்தி வருகிறது.

பன்முகச் சந்தைப்போக்கை உறுதிசெய்ய ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற தொலைதூர நாடுகளின் சந்தைகளில் கவனம் செலுத்துவதும் அந்த உத்தியில் அடங்கும் என்று துணை அமைச்சர் சியூ சூன் மான் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் செயல்பாடுகளில் எழும் சவால்களையும் செலவு தொடர்பான அழுத்தங்களையும் கவனிக்க தமது அமைச்சு தொழில்துறை பங்காளிகளுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈப்போவில் சனிக்கிழமை இரவு மலேசியக் கலாசார விழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திரு சியூ, நாட்டின் சுற்றுப்பயணத் துறையின் வளர்ச்சி நேர்மறையான பாதையில் உள்ளதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு மே மாதம் வரை மலேசியாவுக்கு 17.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை அளித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் 16.9 மில்லியனைக் காட்டிலும் 3.4 விழுக்காடு அதிகம்,” என்று அவர் தெரிவித்தார்.மலேசிய சுற்றுப்பயணம்-2026’ பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் திரு சியூ கூறினார்.

Scroll to Top