Vimarsagan Media

Home » World » பிரிட்டனில் 3 சிகரங்களை இளவரசி கேட் மிடில்டன் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனில் 3 சிகரங்களை இளவரசி கேட் மிடில்டன் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

புற்றுநோய் கண்டறியப்பட்டதற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இந்த சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து, பிரிட்டன் மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிகரங்களான பென் நெவிஸ், ஸ்காபெல் பைக் மற்றும் ஸ்னோடன் ஆகியவற்றை வெறும் 24 மணி நேரத்திற்குள் ஏறமுடியும். இந்த நடைபயணமானது மொத்தம் 10,000 அடிகளுக்கும் அதிகமான உயர மலையேற்றத்துடன், 23 மைல்கள் தூரத்தை கொண்டதாகும்.

ஸ்னோடன் சிகரத்தில் தனது இறுதி மலையேற்றத்தை அவர் முடித்தவுடன், கேட்டை அவரது கணவர் இளவரசர் வில்லியம், அவர்களது மூன்று குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றதாக அரண்மனை தரப்பு உறுதிப்படுத்தியதாக ‘பீப்பிள்’ இதழ் தெரிவித்துள்ளது.

நேற்று பென் நெவிஸ் சிகரத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கேட் மிடில்டன் பகிர்ந்து கொண்டார். அந்தப் புகைப்படத்துடன், தனது புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு இந்த சவாலை ஏற்க ஏன் முடிவு செய்தேன் என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to Top