Vimarsagan Media

Home » Entertainment » அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி?- வெளிப்படையாக பேசிய ஒய்.ஜி.மகேந்திரன்!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி?- வெளிப்படையாக பேசிய ஒய்.ஜி.மகேந்திரன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங் களில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், இந்தத் திருமணச் செய்தியை உறுதி செய்யும் வகையில், அனிருத்தின் உறவினரும், மூத்த நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அப்போது, பிரபல நடிகை குட்டி பத்மினி ஒய்.ஜி.மகேந்திர னிடம் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒய்.ஜி.மகேந்திரன்,”இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக பரவிவரும் தகவலுக்கு, நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் இதை உறுதியாக சொல்கிறேன். அனிருத் மிகவும் நல்ல பையன் அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Scroll to Top