Vimarsagan Media

Home » World » தாய்லாந்தில் அதிர்ச்சி.. 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 பௌத்த துறவிகள் பலி

தாய்லாந்தில் அதிர்ச்சி.. 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 பௌத்த துறவிகள் பலி

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில், புனித பயணமாக நடந்து சென்று கொண்டிருந்த பௌத்த துறவிகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் டிரக் மோதியதில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ள முக்தஹான் (Mukdahan) மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 35 துறவிகள் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே ஐந்து துறவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்ற நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top