தாம்சன் மருத்துவமனை கோத்தா டாமன்சாரா (Thomson), டாக்டர் சவிதா தரன் (Dr Savitha Dharan) அவர்களைத் தனது தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 1 ஜூலை 2026 முதல் நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
மருத்துவப் பயிற்சி, மருத்துவமனை செயல்பாடுகள், உத்திசார் கூட்டணிகள், வணிக மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறை தலைமைத்துவம் ஆகியவற்றில் டாக்டர் சவிதா 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
அயர்லாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (RCSI) அமைப்பிலிருந்து மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளங்கலைப் பட்டங்களையும் (MB BCh BAO), ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் சுகாதாரச் சேவை விநியோக மேலாண்மை குறித்த நிர்வாகக் கல்வியையும் அவர் நிறைவு செய்துள்ளார்.
பொது மற்றும் தனியார் துறைகளில் ஒரு தசாப்த கால மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு, டாக்டர் சவிதா சுகாதாரத் துறை தலைமைத்துவப் பணிக்கு மாறினார்; அங்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுகாதாரக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரியாக, வணிக மாற்றம், செயல்பாட்டுச் சிறப்பு, சேவைப் புத்தாக்கம் மற்றும் உத்திசார் வளர்ச்சி முயற்சிகளை அவர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
இந்த நியமனத்தை வரவேற்று, டிஎம்சி லைஃப் சயின்சஸ் பெர்ஹாட் (TMC Life Sciences Berhad) நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அட்சுவான் ரஹ்மான் (Dato’ Dr. Adzuan Rahman) கூறியதாவது:மருத்துவப் பின்னணி, நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் உத்திசார் தொலைநோக்கு பார்வை ஆகியவை, தாம்சன் மருத்துவமனை கோத்தா டாமன்சாராவை அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல அவரைச் சரியான தலைவராக மாற்றுகின்றன.
மருத்துவச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் மதிப்பு சார்ந்த சிகிச்சை ஆகியவற்றில் எங்கள் அர்ப்பணிப்பை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், முன்னணி பல்நோக்கு உயர்நிலைச் சுகாதாரச் சேவை வழங்குநராக மருத்துவமனை யின் நிலையை அவர் மேலும் வலுப்படுத்துவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.




