Vimarsagan Media

Home » World » குடிநீரில் உள்ள நைட்ரேட்டுகள் குறைமாதப் பிரசவங்களுக்குக் காரணமாக இருக்கலாம்:-ஆய்வு

குடிநீரில் உள்ள நைட்ரேட்டுகள் குறைமாதப் பிரசவங்களுக்குக் காரணமாக இருக்கலாம்:-ஆய்வு

நியூசிலாந்தின் விவசாயத் தொழிலில் இருந்து வரும் நைட்ரேட்டுகளால் மாசடைந்த குடிநீரை அருந்துவதால், அங்கு ஆண்டுக்கு சுமார் 120 குறைமாதப் பிறப்புகள் ஏற்படக்கூடும் என்று ஒரு புதிய தேசிய ஆய்வு தெரிவிக்கிறது.

கேன்டர்பரி, ஒடாகோ, மாஸ்ஸி பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள், குடிநீரில் நைட்ரேட்டுகளின் அளவு ஒரு லிட்டருக்கு 11.3 மில்லிகிராம் என நியூசிலாந்தின் சட்டபூர்வ வரம்பை விட மிகக் குறைவாக இருந்தபோதிலும், நைட்ரேட் கலந்த நீருக்கும் குறைமாதப் பிறப்புகளுக்கும் இடையே ஒரு ‘குறிப்பிடத்தக்க’ தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

நைட்ரேட் செறிவுகள் அதிகரிக்கும்போது இந்த அபாயமும் அதிகரிக்கிறது என்றும், “மிகவும் கடுமையான விளைவுகளுடன் வலுவான தொடர்புகள் காணப்படு கின்றன,” என்றும் அந்த ஆய்வு கூறியது.

நியூசிலாந்தில் இந்த விவகாரம் குறிப்பாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. அங்கு விவசாயம் பொருளியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குடிநீரில் காணப்படும் மிகவும் பொதுவான மாசுகளுள் நைட்ரேட்டும் ஒன்று. நைட்ரேட் மாசுபாட்டிற்கு பெரும்பாலும் உரப் பயன்பாடு, கால்நடை எருவின் வழிந்தோடல் ஆகியவையே காரணமாகக் கூறப்படுகின்றன.

ஃபோன்டெர்ரா போன்ற பால் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் குழு கூறியுள்ளது.செப்டம்பர் மாதம் சக மதிப்பாய்வு க்குட்பட்ட ‘என்வராயின் மென்டல் ரிசர்ச்’ இதழில் வெளியிடப்பட வுள்ள இந்த ஆய்வு, 2008 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 735,000க்கும் மேற்பட்ட பிரசவங்களை ஆய்வு செய்தது.

.அனைத்து வகையான குறைப்பிரசவங்களுக்கும், பிரசவத்திற்கு முந்தைய நைட்ரேட் வெளிப்பாட்டிற்கும் இடையே தொடர்புகள் இருப்பதை தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்ததாக அதன் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Scroll to Top