Vimarsagan Media

Home » Malaysia » RM300,000 மதிப்பிலான போலி கோரிக்கைகள் விவகாரம்: முன்னாள் அரசு ஊழியர் மீது MACC நடவடிக்கை

RM300,000 மதிப்பிலான போலி கோரிக்கைகள் விவகாரம்: முன்னாள் அரசு ஊழியர் மீது MACC நடவடிக்கை

நிதி உதவித் திட்டம் ஒன்றின் கீழ் சுமார் RM300,000 தொகையைப் பெறுவதற்காக, தனது பணி இடத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தடுத்து வைத்துள்ளது.

30 வயதுகளில் உள்ள அந்த ஆண் சந்தேகநபர், வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று மாலை 6 மணியளவில் கோலாலம்பூர் MACC அலுவலகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

“முதற்கட்ட விசாரணையில், அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில், அதாவது 2020 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் இக்குற்றங் களைச் செய்ததாகக் கண்டறியப் பட்டுள்ளது.

மேலும், அந்த உதவியைப் பெறுவதற்கு 11 பேரின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி அவர் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. அவர் மாதந்தோறும் RM500 முதல் RM1,000 வரை பெற்றதாகவும், அந்தத் தொகை நேரடியாக அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC விடுத்த கோரிக்கையை ஏற்று, மாஜிஸ்திரேட் நூருல் இசா ஹசன் பஸ்ரி (Nurul Izzah Hasan Basri) அந்தச் சந்தேகநபர் மீது ஜூலை 17 வரை நான்கு நாள் தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தார்.

Scroll to Top