நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் கூட்டணி எம்சிஏ MCAக்கு ஏழு இடங்களையும் ம இ கா, MIC-க்கு நான்கு இடங்களையும் ஒதுக்கியுள்ளதாக அதன் தலைவர் அஹ்மட் சாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.
அம்னோ (Umno) தலைவருமான சாஹிட் அந்தந்தத் தொகுதிகளில் வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த இடப் பகிர்வு முறை தீர்மானிக்கப்பட்டதாகக் கூறினார்.
நெகிரி செம்பிலான் அம்னோ தலைமையகத்தில் (Wisma Umno) பாரிசான் நேசனலின் வருங்கால வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிரம்பான், பரோய் பகுதியில் உள்ள துவாங்கு அப்துல் ரஹ்மான் மைதான த்தில் இன்று இரவு நடைபெறவுள்ள நிகழ்வில், பாரிசான் நேசனல் வேட்பாளர்களின் முழுப் பட்டியலையும் சாஹித் அறிவிக்கவுள்ளார்.
மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமையும், வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறும்.
கூட்டணிப் பங்காளிகளான பக்காத்தான் ஹரப்பான் (PH) மற்றும் பாரிசான் நேசனல் (BN) ஆகியவை மொத்தம் உள்ள 36 இடங்களிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், மொத்தம் உள்ள 36 இடங்களில் 31 இடங்களைக் கைப்பற்றி பக்காத்தான் ஹரப்பானும் பாரிசான் நேசனலும் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தன




