வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டு ள்ள இவ்வகை குரங்கை, இவர் எப்படி வளர்த்து வருகிறார் என, பலரும் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, வனத் துறையினர் விசாரணையை தொடங் கினர். அப்போது, நடிகர் விக்ரம், தன் சம்பந்தியான, தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் பண்ணை வீட்டில், அந்த குரங்குடன் வீடியோ பதிவிட்டது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, ரங்கநாதன் வீட்டுக்கு சென்றனர். அங்கு லார் கிப்பன் வகை குரங்கு இல்லா மலிருப்பதை பார்த்தனர்.
இது குறித்து விசாரித்த போது, ‘அந்த குரங்கை கொடுத்த, ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவரிடமே, திருப்பி கொடுத்து விட்டோம்’ என, தொழிலதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருந்துறையில் உள்ள கேசவநாதன் பண்ணை வீட்டிற்கு சென்று, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர், மணிப்பூரை சேர்ந்த லைகுராம் என்பவரிடம் இருந்து, மூன்று குரங்குகளை, சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி உள்ளார். அதில், ஒன்று இறந்து விட்டது. தற்போது இரண்டு மட்டும் அங்கிருந்தன. குரங்குகளை வைத்திருப்பதற்கான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லை. எனவே, அந்த குரங்குகளை பறிமுதல் செய்து, வண்டலுாரில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு எடுத்து செல்ல, வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்




