மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தொடர்ந்து காஜாங் (Kajang) சிறையில் உள்ளார். வீட்டுக்காவலுக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவது உட்பட, அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் விதிமுறைகளை அவரும் அவரது சட்டக் குழுவினரும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
செப்டம்பர் 20 அன்று ‘ஷஃபி அண்ட் கோ’ (Shafee & Co) என்ற சட்ட நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், வீட்டுக்காவலுக்கு மாறுவது மன்னிப்புக்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதைப் பொறுத்தே அமையும் என்று நஜீப் தெரிவித்தார்.
“நீதிமன்றத்தில் அபராதத் தொகை செலுத்தப்படும் வரை, எங்கள் கட்சிக்காரர் காஜாங் சிறையிலேயே இருப்பார். எங்கள் கட்சிக்காரரும் எங்கள் சட்டக் குழுவினரும் அந்த விதிமுறை களையும் அவற்றின் நடைமுறை விளைவுகளையும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்,” என்று அந்த அறிக்கை கூறியது.
நஜீப்பின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் உடைமைகளில் கணிசமான பகுதிகள் அரசின் முடக்குதல் உத்தரவுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
“அவற்றை அகற்றுவது அல்லது கையாள்வது தற்போது அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாததால், அந்த நிபந்தனையை நிறைவேற்றும் அவரது திறன், ஒரு வகையில் அவரது கைகளில் இல்லாத விஷயங்களைச் சார்ந்தே உள்ளது,” என்று அது கூறியது




