Vimarsagan Media

Home » India » நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் மறைவுக்கு திரைத்துறையினர், இரங்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் மறைவுக்கு திரைத்துறையினர், இரங்கல்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்.

தமிழ் திரைத்துறையின் அடையாளங் களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள் களும் இருந்தனர். சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி. இருவருக்கு சத்தியலட்சுமி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று உயிரிழந்தார். சாந்தி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Scroll to Top