Vimarsagan Media

Home » World » என் குடும்பத்தை தாயில்லாமல் விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று.தனக்கு சிறுநீரகம் தேவை என ஒரு பெண் பதிவு

என் குடும்பத்தை தாயில்லாமல் விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று.தனக்கு சிறுநீரகம் தேவை என ஒரு பெண் பதிவு

முகநூலில் தனக்கு சிறுநீரகம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்த பெண்ணுக்கு, அவருக்குத் தெரியாத ஒருவர் தானமாக சிறுநீரகம் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

41 வயதான கரேன் டேவி, சிறுநீரகத்திற்காக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் முயற்சி செய்து முடித்திருந்தார். இறுதியாக சமூக ஊடகத்தை நாடிய அவர், “என் குடும்பத்தை தாயில்லாமல் விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான கரேனின் பதிவைப் பார்த்த கேரி சம்மர்ஃபீல்ட், அவர் கரேனுக்கு பொருத்தமான சிறுநீரக தானதாரர் என்பதை அறிந்த பிறகு, தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். ஜூலை மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவர் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

“எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதைவிட, இந்தப் பெண்ணுக்கு என்னுடைய ஒரு சிறுநீரகம் அதிகம் தேவைப்படுகிறது என்று நினைத்தேன்” என்று கேரி கூறினார்.

கேரியின் இந்த தாராள மனப்பான் மைக்கு தங்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்று கரேனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இந்தச் சிறுநீரக தானம் கரேனுக்கு “மீண்டும் ஒரு தாயாக வாழ மற்றொரு வாய்ப்பை” வழங்கியுள்ளதாக அவர்கள் கூறினர்.

Scroll to Top