Vimarsagan Media

Home » World » சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தென்கிழக்காசியாவின் முன்னணி சொகுசுக் கப்பல் நடுவமாகத் திகழ்கிறது.கடந்த ஆண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர்.2024ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவுக்கு வந்த பயணிகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் ஏன் மேலும் வளர்ச்சி காண முயல்கிறது அதிகமானோர் விடுமுறையைக் கடலில் செலவிட விரும்புகின்றனர்.கடந்த ஆண்டு உலகளவில் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 37.2 மில்லியன் என்ற உச்சத்தை எட்டியது.

சிங்கப்பூர் எப்படி அதிகமான பயணிகளை ஈர்க்க முடியும்?சிங்கப்பூர் தென்கிழக்காசியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து மற்ற துறைமுகங்களுக்கு விரைவாகச் செல்லலாம்.

மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்திற்குச் (Port Klang) செல்ல 13 மணிநேரம் பிடிக்கும்.புக்கெட் (Phuket) தீவு, ஹாங்காங் போன்ற இடங்களுக்குக் கப்பலில் சில நாளில் சென்றுவிடலாம்.

விளம்பரம் அதுமட்டுமல்ல.சாங்கி விமான நிலையம் 170க்கும் அதிகமான நகரங்களை இணைக்கிறது.பயணிகள் சிங்கப்பூருக்கு வந்ததும் எளிதாக சொகுசுக் கப்பல் முனையத்திற்குச் செல்லலாம். விமான நிலையத்திலிருந்து ஹார்பர்ஃபிரண்ட் (Harbourfront) முனையத்திற்குக் காரில் சென்றடைய சுமார் அரை மணிநேரம் மட்டுமே தேவைப்படும்.

Scroll to Top