அமைதியைப் பேணவே இம்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, மாநில அரசு அலுவலகமான ‘விஸ்மா நெகிரி’ (Wisma Negeri) உள்ளிட்ட மாநிலத்தின் சில இடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தங்கள் முடிவை நெகிரி செம்பிலான் காவல்துறை நியாயப்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் அரச குடும்பம் சார்ந்த விவகாரத்தில் காவல்துறை எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாகச் செயல்பட வில்லை என்றும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிறுவன ரீதியான நடைமுறைகளைத் தாங்கள் மதிப்பதாகவும் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது (Alzafny Ahmad) தெரிவித்தார்.
“துவாங்கு ஜாஃபர் அரச கலைக்கூடம் (Tuanku Ja’afar Royal Gallery), பாலாய் உண்டங் லுவாக் சுங்கை உஜோங் (Balai Undang Luak Sungei Ujong) மற்றும் விஸ்மா நெகிரி உள்ளிட்ட பல இடங்களில் பணியாளர்களை நிலைநிறுத்தியது, பொது அமைதியைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
“இருப்பினும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் அரண்மனை அறிவித்ததைத் தொடர்ந்து, விஸ்மா நெகிரிக்குச் செல்வதற்கான அணுகலை காவல்துறை முறைப்படுத்தி வருகிறது.
“பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை உறுதி செய்யவும், அந்த வளாகத்தில் நடைபெறும் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும் மட்டுமே இம்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குழப்பம் அல்லது அமைதியின்மை ஏற்படுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் முறை யாகச் செயல்படுத்தப்படுவதாக அல்சாஃப்னி மேலும் கூறினார்.
“அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் விவகாரங்களில், காவல்துறை ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல் படுவதாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பை அங்கீகரிப்பதாகவோ இந்த நடவடிக்கைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது




