நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தி லிருந்து விலகும் என்று அக்கூட்டணி யின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
மலேசியாவின் துணைப் பிரதமரும் அம்னோ (UMNO) கட்சியின் தலைவருமான சாஹிட் 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதுவரை ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தாங்கள் உறுதியாகத் துணை நிற்போம் என்று கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 18-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தனது தொடக்க உரையை நிகழ்த்துகையில், “தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அந்தத் தருணத்திலிருந்தே, நாங்கள் அந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டா




