இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கும் ‘டோரதி’ திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குநர் மிஷ்கின், படக்குழுவினரையும் குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும் உச்சிமுகர்ந்து வெகுவாக பாராட்டி யுள்ளார்.
மிஷ்கின் நெகிழ்ச்சி: என் பிறந்த நாளை மகளுடன் கொண்டாடுவதற்காக கனடா வந்தேன். டோரதி படத்தை கனடாவில் என் மகளுடன் பார்த்தேன். இந்த படம் என் மனதை தொட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு குழந்தையும் பார்க்க வேண்டிய படம். வெறும் திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு கடந்து செல்லக்கூடிய படம் அல்ல இது. படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களை நம் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்தித்து பார்க்க வேண்டும்.




