Vimarsagan Media

Home » World » சுமார் 500 மரண தண்டனையை நேரில் பார்த்துள்ளேன்.ஆனால் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை’

சுமார் 500 மரண தண்டனையை நேரில் பார்த்துள்ளேன்.ஆனால் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் மரண தண்டனைகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

மரண தண்டனை நிறைவேற்றும்போது ஊசி வெளியே வந்த இரண்டு சம்பவங்களை அவர் நினைவுகூர்கிறார். பின்னர் ஊசி மீண்டும் செலுத்தப்பட்டு, மரண தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், மரண தண்டனைக்குப் பிறகும் கைதி உயிருடன் இருந்த சம்பவத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை.

ஆனால், கடந்த வாரம் அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் அப்படியொரு சம்பவம் நடந்தது. 50 வயதான கைதி கிறிஸ்டா பைக், மரண தண்டனைக்குப் பயன்படுத்தப்படும் பென்டோபார்பிட்டல் என்ற மருந்தின் இரண்டு தனித்தனி அளவுகள் செலுத்தப்பட்ட பிறகும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அவர் குறட்டை விடும் சத்தமும் கேட்டது.

76 வயதான கிராசிக், இந்த அசாதாரண சம்பவம் குறித்து கேள்விப்பட்டபோது முழுமையாக ஆச்சரியப்படவில்லை என்கிறார்டெக்சாஸ் செய்தியாளராக பல தசாப்தங்கள் பணியாற்றியபோதே இதுபோன்ற ஒன்று நடக்கக்கூடும் என்ற சாத்தியம் குறித்து அவர் யோசித்திருந்தார்.

“இது நடப்பதற்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு வரும் என்றுதான் எனக்குத் தோன்றியது,” என்று அவர் தெரிவித்தார்.

மைக்கேல் கிராசிக்,பட மூலாதாரம்,AP

படக்குறிப்பு,மைக்கேல் கிராசிக்

அசோசியேட்டட் பிரஸ் தகவலின்படி, டென்னஸி மாநிலத்தின் மரண தண்டனை நடைமுறையில், முதல் தொகுப்பு மருந்தை செலுத்திய பிறகும் கைதி உயிரிழக்கவில்லை என்றால் பயன்படுத்துவதற்காக, பென்டோபார்பிட்டல் நிரப்பப்பட்ட இரண்டாவது தொகுப்பு ஊசிகளும் தயாராக வைக்கப்படும்.

ஆனால், இரண்டாவது தொகுப்பையும் செலுத்திய பிறகும் கைதி உயிருடன் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த நடைமுறையில் குறிப்பிடப்படவில்லை.

Scroll to Top