அரசியல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்வர் விஜய் போலவே நேரடியாக 2031 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த அரசியல் மாற்றதால், தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக மாறி, மாறி கோலோச்சிய திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்த பிறகு, நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் அரசியல் கட்சியை தொடங்கினர். ஆனால், அவர்களால் எம்ஜிஆரை போல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
அதேநேரத்தில், விஜய் தவெகவை தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டதால், மற்ற நடிகர்களும் அரசியலில் களம் இறங்க தயாராகி வருகின்றனர். இதில் நடிகர் தனுஷ் புதிய இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். நடிகர் தனுஷை தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களுடைய ரசிகர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். மற்ற நடிகர்களை விட, தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள தனுஷ், அதற்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இருந்தும் மீண்டெழுந்து மாபெரும் வெற்றி பெற்று அரசியல் களத்தையே மாற்றியுள்ளார். விஜய்யின் அபார வெற்றியை பார்த்த, ரஜினி தரப்பினர் மற்றும் அவரது ரசிகர்கள் நல்வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங்கத்தில் உள்ளனர். அந்த ஆதங்கத்தை போக்கும் விதமாகவே, ரஜினியின் மருமகனாக இருந்த நடிகர் தனுஷ் அரசியல் களம் காண உள்ளார்.
ரஜினியின் பக்கபலத்தோடு தீவிர அரசியலில் ஈடுபடவுள்ள தனுஷ், விஜய் போலவே கட்சி தொடங்கி, வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக 2031-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.




