Vimarsagan Media

Home » India » கௌதம் மேனனின் 25 ஆண்டு சாதனை – ‘கோலாலம்பூரில் இசை விருந்து!

கௌதம் மேனனின் 25 ஆண்டு சாதனை – ‘கோலாலம்பூரில் இசை விருந்து!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் ‘ஒன்றா ரெண்டா’ இசை கச்சேரி கோலாலம்பூரில் அக்டோபர் 10-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற எவர்கிரீன் பாடல்களைக் கொண்டாடும் விதமாக இந்தத் தொடர் கச்சேரிகள் ‘ஒன்றா ரெண்டா’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்னணிப் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள்

இந்த பிரம்மாண்ட கச்சேரியில் ரசிகர்களுக்குப் பிடித்த பல முன்னணிப் பாடகர்கள் மேடையேறுகின்றனர். கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளேஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ் மற்றும் ஹரிப்ரியா.

இசைக்கலைஞர்களாக கேபா ஜெரெமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார், கீத் பீட்டர்ஸ் மற்றும் புவனேஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து நேரலையில் இசை விருந்து படைக்கவுள்ளனர்.

Scroll to Top