90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்த பிரபலம் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் தமிழில் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர்’ படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். அதன்பின்பு ‘தலைவாசல்’ படத்தின் மூலம் சிவரஞ்சினிக்கு நல்ல பெயர் கிடைத்தது. சிவரஞ்சனியின் பூனைக்கண் தான் அவருக்கு கிடைத்த தனி அழகு.
இதனாலே இவருடைய படங்களை பார்க்கும் ரசிகர்களை சொக்கி விழ வைக்கும். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி என்ற தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
பின்பு சிவரஞ்சினி, தன்னுடன் நடித்த சக நடிகரான மேகா ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கு இரு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளார்.மேதா ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ருத்ரமாதேவி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




