காஜாங், ஜலான் நிலாம் 2 (Jalan Nilam 2) பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கார்களும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் சிக்கிக் கொண்டன.
எனினும், இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.இந்தச் சம்பவம் மாலை சுமார் 5 மணியளவில் நிகழ்ந்தது.
ஹுலு லங்காட் மாவட்ட சிவில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
நிலச்சரிவினால் எந்தவொரு வீடும் பாதிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் நிலச்சரிவுகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, காவல்துறையினரும் காஜாங் நகராட்சி மன்ற அதிகாரிகளும் அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்




