Vimarsagan Media

Home » Malaysia » மக்கள் ஓசை’ மூத்த ஆசிரியர் ராஜன் பூபாலனுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியுதவி

மக்கள் ஓசை’ மூத்த ஆசிரியர் ராஜன் பூபாலனுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியுதவி

தலையில் ரத்த உறைவு ஏற்பட்டதை யடுத்து செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘மக்கள் ஓசை’ மூத்த ஆசிரியர் ராஜன் பூபாலனுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், பிரதமரின் சார்பாக மருத்துவமனைக்குச் சென்று ராஜனைச் சந்தித்ததாக அன்வார் தெரிவித்தார்.

“அவரது உடல்நிலை குறித்து விசாரித்து எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த துடன், சிகிச்சையின் போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில் எனது சார்பாக நிதியுதவி ஒன்றையும் அவர்கள் வழங்கினர்,” என்று அன்வார் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ராஜன் விரைவில் குணமடையவும், அவரது சிகிச்சை எவ்வித இடையூறு மின்றி நடைபெறவும் அவர் பிரார்த்தனை செய்தார்.

ராஜன் முழுமையாகக் குணமடைவார் என்றும், இந்தக் கடினமான கால கட்டத்தைக் கடந்து செல்ல அவரது குடும்பத்தினருக்குத் தேவையான மனவலிமை கிடைக்கும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தலையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவ தற்கான அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது; தற்போது அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது – பெர்னாமா

Scroll to Top