Vimarsagan Media

Home » World » ஆயிரம் டிரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்.. தீ பிடித்து எரியும் ரஷிய எண்ணெய் ஆலைகள்

ஆயிரம் டிரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்.. தீ பிடித்து எரியும் ரஷிய எண்ணெய் ஆலைகள்

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் படைகள் தங்களின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை மேற்கொண்டன.

ரஷியா மீது நேற்று உக்ரைன் ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அதில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் ஏற்றுமதி முனையம் தாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முனையமும், அதன் அருகில் உள்ள ருச்சி எண்ணெய் கிடங்கும் தீப்பற்றி எரிந்தன.

இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர். ரஷியாவின் ஓசோன் நிறுவனத்துக்குச் சொந்தமான தளவாட மையம் மற்றும் தரவு மையம் ஆகியவையும் தாக்கப்பட்டன. அதே சமயத்தில், உக்ரைன் ஏவிய 1,015 டிரோன்களை தாக்கி அழித்து விட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது

Scroll to Top